Headlines

விநாயகர் சதுர்த்தி : பிள்ளையார்பட்டியில் குவிந்த பக்தர்கள்

விநாயகர் சதுர்த்தி : பிள்ளையார்பட்டியில் குவிந்த பக்தர்கள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரசித்திபெற்ற பிள்ளையார்பட்டி கோவிலில் அதிகாலை முதலே அருகம்புல்லுடன் சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே குடைவரைக் கோயிலான பிள்ளையார்பட்டி தமிழ்நாட்டின் மிகப்பழமையான குகைக் கோயில்களுள் ஒன்றாகும்.
இங்கு விநாயகப்பெருமான் மற்ற இடங்களில் காணப்படுவதைப் போல நான்கு கைகளுடன் இல்லாமல் இரு கைகளுடன் காணப்படுகிறார்.

இந்த ஆண்டு சதுர்த்தி விழா இக்கோயிலில் கோலாகலகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் 5 ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. அன்றிலிருந்து தினசரி பகல் மற்றும் இரவில் உற்சவர் ஸ்ரீ கற்பக விநாயகர் திருநாள் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பகலில் வெள்ளி கேடகத்தில் திருவீதி உலாவரும் விநாயகர், இரண்டாம் நாள் விழாவில் இருந்து இரவில் மூஷிக வாகனம், சிம்ம வாகனம், பூத வாகனம், கமல வாகனம், ரிஷப வாகனம், மயில் வாகனம், குதிரை வாகனங்களில் உற்சவர் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த பக்தர்கள் கைகளில் அருகம்புலுடன் விநாயகரை தரிசிக்க நீண்ட வரிசையில் காத்திருந்து வருகின்றனர். ஒவ்வாெரு ஆண்டும் இக்கோயிலில் சதுர்த்தி அன்று கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பஞ்சாங்க முறைப்படி இன்று காலை 10 மணிக்கு சதூர்த்தி விழா தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *