Headlines

விநாயகர் சதுர்த்தி : விநாயகர் சிலைகள் விற்பனை தீவிரம்

விநாயகர் சதுர்த்தி : விநாயகர் சிலைகள் விற்பனை தீவிரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் விற்பனை அதிகரித்துள்ளதால் விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஜோலார்பேட்டை கட்டேரி பகுதியில் அமைந்துள்ள சிலை விற்பனையகத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பல வண்ணங்களில், பல டிசைன்களில் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
சுமார் 15 ஆண்டுகளாக
விநாயகர் சிலை வியாபாரம் செய்து வரும் இந்த விற்பனையகத்தில்
விநாயகர் சிலை ஐந்து அடிக்கு மேல் வாங்கும் நபர்களுக்கு பரிசு பொருள்கள் வழங்கப்பட்டு விற்பனை நடைபெறுகிறது.

இந்த நிலையில் பொதுமக்கள் அனைவரும் விநாயகர் சிலை வாங்குவதற்கு முன்கூட்டியே பணம் கொடுத்து எங்களுக்கு இந்த விநாயகர் சிலை வேண்டும் என புக் செய்து சென்றுள்ளனர். ஆடர்கள் அடிப்படையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஒரு அடி முதல் 10 அடிக்கு மேலான விநாயகர் சிலை தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு விற்பனை அமோகமாக உள்ளது என சிலை தயாரித்து விற்பனை செய்பவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *