Headlines

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் கடும் வறட்சி : கால்நடை வளர்ப்போர் பாதிப்பு

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் கடும் வறட்சி : கால்நடை வளர்ப்போர் பாதிப்பு

விருதுநகர் மாவட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் போதிய மழை இல்லாததால் கடந்த சில மாதங்களாக நிலவும் கடும் வறட்சியின் காரணமாக கூமாபட்டி, வத்திராயிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் வளர்க்கப்படும் ஆயிரக்கணக்கான மலை மாடுகளுக்கு போதிய உணவு மற்றும் தண்ணீர் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இப்பகுதியில் சுமார் 10,000 மேற்பட்ட மலை மாடுகள் வளர்க்கப்பட்டு வரும் நிலையில் நீர் நிலைகள், மேய்ச்சல் நிலப்பகுதியில் மேய்ச்சலுக்காக அழைத்துச் செல்லப்படுவது வழக்கம். ஆனால் தற்போது நீர் நிலைகள் வறண்ட நிலையிலும், மேய்ச்சல் நிலப்பரப்பு அனைத்தும் காய்ந்தும் கிடப்பதால் மலை மாடுகளின் பசி மற்றும் தாகத்தை தீர்ப்பதில் கடும் சவால் ஏற்பட்டுள்ளதாக மலைமாடு வளர்ப்போர் கவலை தெரிவிக்கின்றனர்.

வறட்சி காலங்களில் இதுபோன்ற சிரமங்களை தவிர்க்க நீர்நிலைகளில் தண்ணீர் தொட்டிகள் அமைத்து தண்ணீர் நிரப்பி தர வேண்டும் என மலைமாடு வளர்ப்போர் அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *