திருச்சியில் திருமண விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த
முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது,
தமிழக முதல்வர் லண்டன் சென்று தொழில் முனைவோர்களை ஈர்த்து வருவதாக சென்றுள்ளார். ஆனால் இதுவரை எந்த தொழில் முனைவோர்களையும் ஈர்த்தது போல் தெரியவில்லை. பத்திரிக்கையில் புகைப்படத்தை பார்த்தேன்.ஆனால் தொழில் முனைவோரை ஈர்த்தது போல் படம் இன்னும் வரவில்லை. என்றார்.
தாராபுரம்,மதுராந்தகம் உள்ளிட்ட இரண்டு தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு தொகுதிகளிலும் அதிமுக ஏற்கனவே வெற்றி பெற்றது,எனவே இப்போதும் அதிமுக கண்டிப்பாக வெற்றி பெறும்.
இந்த ஆட்சியை மோசமான ஆட்சியாக தான் நான் பார்க்கிறேன். விவசாயிகள் போராட்டம்,செவிலியர் போராட்டம் என பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது ஆட்சி துவங்கியதில் இருந்து போராட்டமாக தான் உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடுமையான மின்வெட்டு ஏற்பட்டு பொதுமக்கள் சாலையில் மெழுகுவர்த்தியுடன் போராட்டம் நடத்தியதை பார்த்தேன். இது குறித்து அறிக்கை வெளியிட்டும் சட்டப்பேரவையிலும் பேசிவிட்டோம்.
ஆனால் எந்த பதிலும் இல்லை, தமிழகத்தில் கடுமையான மின்வெட்டு ஏற்பட்டு கொண்டுள்ளது.
இரண்டு தொகுதிகளிலும் குதிரை பேரும் நடத்தி தங்கள் பக்கம் இழுத்து தற்போது அவர்களையே வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். எனவே மக்கள் நிச்சயமாக நல்ல பாடம் புகட்டுவார்கள், கண்டிப்பாக அவர்களை தோற்கடிப்பார்கள்.
தமிழகத்திற்கு 10 லட்சம் கோடி கடன் இருக்கிறது என வெள்ளை அறிக்கை விட்டார்கள். ஆனால் புதிய தலைமை செயலகம் எதற்கு? இருக்கின்ற தலைமைச் செயலகம் போதாதா? மேலும் அவர்கள் தேர்வு செய்த இடம் சரியில்லை மீனவ மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதி, பள்ளிகள் அதிகம் உள்ள பகுதி ,மேலும் போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதி, இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் அவசர கதியில் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
நிதிநிலையை சரி செய்துவிட்டு பொறுமையாக அனைவரும் இருக்கும் வகையில் தலைமை செயலகம் கட்ட வேண்டும் என்பது தான் எங்களுடைய எண்ணம்.
தமிழகத்தில் பெண்கள் சிறுமிகளுக்கு பாதுகாப்பில்லை ஒட்டுமொத்தமாக பொது மக்களுக்கு பாதுகாப்பு இல்லை, பத்திரிக்கை ஊடகத்தை திறந்தால் இது போன்ற செய்திகள்தான் உடனே வருகிறது
இவர்கள் ஆட்சிக்கு வந்த காரணத்தினால் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது இதுதான் எதார்த்தமான உண்மை. என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
