Headlines

சுதந்திரம் வாங்கி கொடுத்தது விஜயின் தாத்தா என்று கூட சொல்வார்கள் : முன்னாள் அமைச்சர் ரகுபதி

சுதந்திரம் வாங்கி கொடுத்தது விஜயின் தாத்தா என்று கூட சொல்வார்கள் : முன்னாள் அமைச்சர் ரகுபதி

இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தந்தது காந்தி கிடையாது. விஜயின் தாத்தாவுக்கு தாத்தா என்று கூட ரீல்ஸ் போடுவார்கள். அதையும் மக்கள் நம்பக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.
அபாண்டமாக பேசுவதையே தமிழக வெற்றி கழகத்தினர் தொழிலாக வைத்துள்ளனர் என முன்னாள் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மிசா குறித்து அவதூறாக பேசிய முதல்வர் விஜயை கண்டித்து புதுக்கோட்டை திலகர் தேர்தலில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

வரலாற்றை மாற்ற பார்க்க இயக்கமாக இன்றைக்கு தமிழக வெற்றிக்கழகம் உள்ளது.இதே நிலை நீடித்தால் இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தந்தது காந்தி கிடையாது விஜயின் தாத்தாவுக்கு தாத்தா என்று அவர்கள் ரீல்ஸ் போடுவார்கள் அதையும் மக்கள் நம்பக்கூடிய சூழ்நிலை ஏற்படும்
அபாண்டமாக பேசுவதையே தொழிலாக தமிழக வெற்றி கழகம் வைத்துள்ளனர்.
உண்மையை ஒரு தடவையாவது பேசுவார்களா? என்றார்.

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் 15 குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி கேட்டிருந்தார் அதற்கெல்லாம் முதலமைச்சர் பதில் கூறவில்லை.

யாராவது லஞ்சம் வாங்கினால் விஜய் மாமாவிடம் கூறி விடுவேன் என்று கூறுங்கள் என்று முதலமைச்சர் கூறினார். லஞ்சம் வாங்குவது குறித்து வெளிய கூறியவர் அடுத்த நாள் உயிரோடு இல்லை. இதுதான் இன்றைய நிலை.

திமுக அரசு கார் பந்தயம் நடத்தியதை அப்போது தமிழக வெற்றிக் கழக தலைவர் விமர்சனம் செய்தார். ஆனால் தற்போது அவர் 400 கோடி ரூபாய் செலவில் கார் ரேஸ் நடத்துவதற்கு தனி மைதானம் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

கரூா் சம்பவம் நடந்தபோது விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என அப்போதைய சட்டத்துறை அமைச்சராக இருந்த நான், முதல்வா் ஸ்டாலினிடம் கூறினேன். சட்டப்படி அவா்தான் முதல் குற்றவாளியாக வர வேண்டும்.

விஜய் ஒரு நடிகா். இப்போதுதான் கட்சித் தொடங்கியிருக்கிறாா். அவரை சிறையில் அடைக்க வேண்டாம். எனவே, அவா் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டாம் என ஸ்டாலின் மனிதாபிமானத்துடன் கூறினாா். மக்கள் நன்றாக இருக்கிறாா்கள்.நம் மீது நம்பிக்கை வைத்திருக்கிறாா்கள் என ஸ்டாலின் கூறினாா்.

தற்போதைய முதல்வா் ஜோசப் விஜய் மனிதாபிமானம் அற்றவா். குற்றப்பத்திரிகைகளை எல்லாம் தீா்ப்பைப் போல சட்டப்பேரவையில் வாசிக்கிறாா். என் மீது கூட நிறைய குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. எல்லா வழக்குகளில் இருந்தும் நான் விடுவிக்கப்பட்டிருக்கிறேன்.

மிசா வரலாறு அமைச்சா் நிா்மல்குமாருக்குத் தெரியாது. அபாண்டமாகப் பேசுவதையே தொழிலாகக் கொண்டவா்கள். தினமும் ஒரு மணி நேரம் ஏற்படும் மின்தடையைக் கட்டுக்குள் கொண்டுவரத் தெரியவில்லை. விலைவாசி கடுமையாக உயா்ந்துள்ளது. இதனால் மக்கள் புரட்சி வெடிக்கப் போகிறது. அந்தப் புரட்சிதான் இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போகிறது.

சா்க்காரியா ஆணைய அறிக்கை கைவிடப்பட்ட ஒன்று. அதை வாசிக்கக் கூடாது. தீா்ப்புகள்தான் வாசிக்கப்பட வேண்டும். முதல்வா் விஜய் திரைப்படத்தில்தான் கதாநாயகன்; அரசியலில் அவா் வில்லன்.

கூட்டணியை மதிப்பவா் திமுக தலைவா் ஸ்டாலின். திருமாவளவன் இப்போது தவெகவுடன் இருக்கிறாரா? என்பதை அவா்தான் சொல்ல வேண்டும். வைகோவும், துரைவைகோவும் அரசியலில் நகைச்சுவை நடிகா்கள், சந்தா்ப்பவாத அரசியல்வாதிகள். திமுக அணியை அப்போது கல்லாப்பெட்டி கூட்டணி என்றாா்கள், இப்போது தவெக கூட்டணி, சமூகநீதி கல்லாப்பெட்டி கூட்டணியா? என்றாா் ரகுபதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *