Headlines

தாராபுரம் இடைத்தேர்தல் : வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு

தாராபுரம் இடைத்தேர்தல் : வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு

திருப்பூர் எல்.ஆர் .ஜி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணிக்கை மைய பணிகளை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாராணவரே பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது பிரதான கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் 15ம் தேதி செவ்வாய் கிழமை அன்று அனைவரும் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இடைத்தேர்தல் பணிகள் துரிதமாகவும் சரியான முறையில் நடைபெற வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான மனிஷ் நாராணவரே உத்தரவிட்டுள்ளார். மேலும் தாராபுரம் இடைத்தேர்தலில் பங்கேற்கும் ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கும் பணிகளையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். வாக்குப்பதிவு நிறைவடைந்த உடன் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதன்படி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள எல் ஆர் ஜி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணிக்கை மையத்தின் பணிகளை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாராணவரே ஆய்வு செய்தார். தாராபுரம் தேர்தல் நடத்தும் அலுவலர் பெலிக்ஸ் ராஜா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *