Headlines

மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி உயிரிழப்பு : கட்டிட பணியின் போது விபரீதம்

மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி உயிரிழப்பு : கட்டிட பணியின் போது விபரீதம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தார்வழி பகுதியில் சித்திக் என்பவருக்கு புதிய வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை முதல் கட்டிட மேஸ்திரிகள் மற்றும் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மிட்டாளம் பகுதியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி ராஜேந்திரன், கட்டுமானப் பணிக்காக கம்பியை எடுத்தபோது, அருகில் சென்ற மின்சார கம்பியில் அந்த கம்பி உரசியதாக கூறப்படுகிறது.இதில் ராஜேந்திரனை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் நகர போலீசார், ராஜேந்திரனின் உடலை கைப்பற்றி ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து ஆம்பூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *