Headlines

பண்ணாரி : கோவில் மதில் சுவரில் படுத்திருந்த சிறுத்தை.

பண்ணாரி : கோவில் மதில் சுவரில் படுத்திருந்த சிறுத்தை.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள பண்ணாரி அம்மன் கோவில் முன்புறமுள்ள மைதானத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள மதில் சுவர் மீது சிறுத்தை ஒன்று படுத்து இருந்தது.

நள்ளிரவில் சிறுத்தை மதில் சுவர் மீது படுத்திருப்பதைக் கண்ட கோவில் பணியாளர்கள் உடனடியாக வனத்துறை ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறை ஊழியர்கள் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்தனர். சுமார் அரை மணி நேரம் மதில் சுவர் படுத்து இருந்த சிறுத்தை பின்னர் மெதுவாக எழுந்து வனப்பகுதிக்குள் தாவிக் குதித்து ஓடி மறைந்தது. சிறுத்தை கோவில் மதில் சுவர் மீது படுத்திருந்த தகவல் அறிந்த பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *