1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான காலாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 1 மற்றும் 2ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 17இல் தொடங்கி செப்டம்பர் 24ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெற உள்ளது.
3 முதல் 10ஆம் வகுப்பு வரை செப்டம்பர் 16இல் காலாண்டு தேர்வுகள் தொடங்கி, செப்டம்பர் 24 வரை காலாண்டு தேர்வு நடைபெற உள்ளது.
11, 12ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 16இல் காலாண்டு தேர்வுகள் தொடங்கி செப்டம்பர் 25 ஆம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளதாகவும் பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
