Headlines

பாறைக்குழிக்குள் குப்பை கொட்ட தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை உத்தரவு : மகிழச்சியில் கிராம மக்கள்

பாறைக்குழிக்குள் குப்பை கொட்ட தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை உத்தரவு : மகிழச்சியில் கிராம மக்கள்

திருப்பூர் அருகே
வெள்ளியம்பாளையத்தில் உள்ள பாறைக்குழிக்குள் மாநகராட்சி நிர்வாகம் குப்பை கொட்ட தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை உத்தரவு பிறத்துள்ளதால் கடந்த
10 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வந்த கிராம மக்கள், விவசாயிகள் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளியம்பாளையம் பகுதியில் உள்ள பாறை குழிக்குள் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம்
தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக மாநகராட்சி கழிவு குப்பைகள் 10000 டன் அளவிற்கு கொட்டியதால், கிராம பகுதிகளில் சுகாதார சீர்கேடு, நிலத்தடி நீர் பாதிப்பு துர்நாற்றம் வீசுவதாகவும் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் கடும் குற்றச்சாட்டு தெரிவித்து மாநகராட்சி கழிவு ஏற்றி வந்த லாரிகளை சிறை பிடித்து சாலை மறியல்,காதில் பூ சுற்றிக் கொண்டும் பல கட்ட போராட்டங்களை நடத்தியும் எதிர்ப்பை தெரிவித்தனர்,
ஆனால் மாநகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதை நிறுத்தாமல் தொடர்ந்து கொட்டி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நோய் பாதிப்பும் ஏற்படுவதாக கூறி மாநகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாநகர மக்கள் வாழ்வதற்கு புறநகர் பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் தேய்வதால் எந்த தவறும் இல்லையா என்கிற வாசகங்கள் இடம் பெற்ற பதாகையுடன் கிராம மக்கள் தொடர்ந்து 10 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்,

இந்த நிலையில் மாநகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் மாநகராட்சி நிர்வாகம் வெள்ளியம்பாளையம் பாறைக்குள் இனி குப்பைகளை கொட்டக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது ,வெள்ளியம்பாளையம் பாறை குழிக்குள் குப்பை கொட்டுவதற்கு தடைவிதித்ததை வரவேற்கும் விதமாக தொடர்ந்து 10 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்கள் விவசாயிகள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

குப்பை கொட்டுவது தொடர்பாக வெள்ளியம்பாளையம் கிராம மக்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது,
இதற்கு மேலும் மாநகராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்ட வாகனத்தோடு வரும்போது வாகனத்தை சிறை பிடிப்போம் என்றும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *