Headlines

திமுக., தவெக.,வை தொடர்ந்து வேட்பாளர்களை அறிவித்த அதிமுக.,

திமுக., தவெக.,வை தொடர்ந்து வேட்பாளர்களை அறிவித்த அதிமுக.,

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

தமிழ்நாட்டில் திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், விராலிமலை, கரூர், அம்பாசமுத்திரம், பெருந்துறை ஆகிய 7 தொகுதிகள் காலியாக உள்ளன.

இதில் திருச்சி கிழக்கை தவிர்த்த மற்ற 6 தொகுதிகளிலும் வென்ற அதிமுக வேட்பாளர்கள், தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக்கழகத்தில் ஐக்கியமானதால் காலியானதாக அறிவிக்கப்பட்டவை.

இந்நிலையில் கடந்த 7ம் தேதி தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. வேட்புமனு தாக்கல் கடந்த 9 ஆம் தேதி துவங்கி 16 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

நேற்று முன்தினம் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். மதுராந்தகம் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் சுகன்யாவும் திமுக சார்பில் களம் காண்கின்றனர்.

அதேபோல் நேற்று காலை தமிழக வெற்றிக்கழக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த மரகதம் குமாரவேல் மதுராந்தகம் தொகுதிக்கும், சத்தியபாமா தாராபுரம் தொகுதிக்கும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் அதிமுக தலைமை நேற்று மாலை வேட்பாளர்களை அறிவித்தது. அதன்படி, மதுராந்தகம் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ கணிதா சம்பத்தும், தாராபுரம் தொகுதியில் பானுமதியும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
மூன்று பிரதான கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறவித்துள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.

இடைத்தேர்தல் வாக்குப்பதிவு
அக்டோபர் 6 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை
அக்டோபர் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதுவரை தேர்தல் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *