Headlines

பள்ளி மாணவியிடம் அத்துமீறல் – காவல் நிலையத்திற்குள் அரசு பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்

பள்ளி மாணவியிடம் அத்துமீறல் – காவல் நிலையத்திற்குள் அரசு பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே அரசு பேருந்தில் பள்ளி மாணவியிடம் நடத்துனர் அநாகரிகமாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் புகாரைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசு பேருந்து நடத்துனரை வழிமறித்து தாக்கியதுடன், காவல் நிலையத்திற்குள்ளும்புகுந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊத்தங்கரை அருகே அரசு பேருந்தில் பள்ளி மாணவி ஒருவர் பயணம் செய்துள்ளார். அப்போது பேருந்து நடத்துனர் மாணவியிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, வீட்டிற்கு சென்று நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், சம்பந்தப்பட்ட அரசு பேருந்து ஊத்தங்கரை பகுதிக்கு வந்தபோது அதனை வழிமறித்துள்ளனர். பின்னர் நடத்துனரை பேருந்தில் இருந்து கீழே இறக்கி சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் நடத்துனருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பொதுமக்களிடமிருந்து நடத்துனரை மீட்டு விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.ஆனால், ஆத்திரம் அடங்காத மாணவியின் உறவினர்கள் மற்றும் சிலர் காவல் நிலையத்திற்கும் திரண்டு வந்தனர்.
அங்கு போலீசாரின் பாதுகாப்பையும் மீறி நடத்துனரை மீண்டும் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனை போலீசார் தடுக்க முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அரசு பேருந்து நடத்துனர் காவல் நிலைய வளாகத்திற்குள்ளேயே தாக்கப்பட்ட சம்பவம் ஊத்தங்கரை பகுதியில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவியிடம் நடத்துனர் உண்மையில் அத்துமீறி நடந்துகொண்டாரா? என்பது உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *