Headlines

தாராபுரம் இடைத்தேர்தல் :தமிழக வெற்றி கழக வேட்பாளராக சத்தியபாமா அறிவிப்பு

தாராபுரம் இடைத்தேர்தல் :தமிழக வெற்றி கழக வேட்பாளராக சத்தியபாமா அறிவிப்பு

தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழக வேட்பாளராக சத்தியபாமா போட்டியிடுவார் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சத்யபாமா. இவரது கணவர் பொன்னுச்சாமி 2011ல் தாராபுரம் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் விவசாயம் மற்றும் கேஸ் ஏஜென்சி வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி சத்தியபாமாவும் அதிமுகவில் கடந்த 20 ஆண்டுகளாக பயணித்து மாவட்ட ஊராட்சி குழு தலைவராக இருந்தார்.

இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் 16 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த சூழலில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து தமிழக வெற்றிக்கழக திருப்பூர் தென்கிழக்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

தற்போது இவருக்கு தாராபுரம் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *