திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த குப்பநத்தம் பகுதியில் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக முறையாக குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் காலி குடங்களுடன் வாகனங்களை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டது.
குப்பந்த்தம் ஊராட்சியில் ஒரு சில பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கிவிட்டு குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் தண்ணீர் வழங்காதது ஏன் என கேள்வி எழுப்பிய பொதுமக்கள், ஊராட்சி செயல் அலுவலரிடம் சமைக்கவோ, குளிக்கவோ, அத்தியாவசிய தேவைகளுக்கும் கூட தண்ணீர் இன்றி தவித்து வருவதாக பல முறை கூறியும் அவர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.

சாலை மறியலால் அம்மாவாசை என்பதால் கிளையூர் காளியம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அவ்வழியே செல்ல முடியாமல் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். பள்ளி வாகனங்கள், அரசு பேருந்துகள் நீண்ட தூரம் அணிவகுத்து நிற்பதால் சாலை போக்குவரத்து சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் யாரும் சாலைமறியலில் ஈடுபட்டுள்ற பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபடாதால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
