Headlines

அரபி பாடசாலையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை – மதகுரு கைது

அரபி பாடசாலையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை – மதகுரு கைது

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கணவரை விவாகரத்து செய்து தனியாக வசித்து வருகிறார். இவரது இரண்டாம் வகுப்பு படிக்கும் மகள், கடந்த இரண்டு ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள பள்ளிவாசல் அரபி பாடசாலையில் படித்து வந்துள்ளார்.

இந்த அரபி பாடசாலையில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த 27 வயதான அன்சாரி என்பவர் கடந்த நான்கு ஆண்டுகளாக மதகுருவாக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில், சிறுமிக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெற்றோர் விசாரித்தபோது, மதகுரு அன்சாரி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் தாயார் சாக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் மகேஸ்வரி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அன்சாரியை கைது செய்தார்.

தொடர்ந்து, அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *