தாராபுரம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக்கழக வேட்பாளாராக எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த சத்யபாமா அறிவிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் ராஜினாமா செய்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்ததை தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.தாராபுரம் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.நேற்று வேட்புபனு தாக்கல் துவங்கியது.
திமுக சார்பில் வழக்கறிஞர் சுகன்யா போட்டியிடுவார் என திமுக தலைமை நேற்று அறிவித்தது.
இந்நிலையில் இன்று தமிழக வெற்றிக்கழக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த மரகதம் குமாரவேல், சத்தியபாமா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இதையடுத்து தாராபுரத்தில் தவெகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
