தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக வழக்கறிஞர் சுகன்யா அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த தளவாய் பட்டினம் பகுதியை சேர்ந்தவர். இவரது கணவர் மணிவாசகம் விவசாயி. மேலும் திமுக திருப்பூர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி பொறுப்பில் உள்ளார் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சுகன்யா வழக்கறிஞராக உள்ளார். திருப்பூர் கோவை நீதிமன்றத்தில் 11 ஆண்டுகளாக பயிற்சி செய்து வருகிறார். இவர்களது குடும்பம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் உள்ளது.
2012 ஆம் ஆண்டு முதல் திமுகவில் பொறுப்பு வகிக்கும் சுகன்யா தற்போது திருப்பூர் கிழக்கு வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளராக உள்ளார் தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட இவர் விருப்ப மனு அளித்த நிலையில் இவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கோவை நீதிமன்றத்தில் பணியில் இருந்த இவருக்கு இந்த தகவல் கிடைத்த உடன் மகிழ்ச்சி அடைந்த அவர் தாராபுரத்தில் உள்ள தனது தந்தையிடம் ஆசிர்வாதம் பெற்றார். மேலும் உறவினர்கள் இவருக்கு இனிப்பு கொடுத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து செய்தியாளர்களை தற்போது சந்திக்கவில்லை எனவும், சென்னை சென்று திமுக தலைவரை சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளதாகவும் அவரிடம் ஆசி பெற்று திரும்பிய பின்னர் செய்தியாளர்களை சந்திக்கிறேன். உங்களது ஆதரவு எனக்கு நிச்சயம் தேவை என தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. மக்களை நம்பி களத்தில் இறங்குகிறோம். வெற்றி வேட்பாளர் நான் தான். அனைவரும் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். தலைவர் மக்களை நம்பி உள்ளார். நான் தலைவரை நம்பி களத்தில் இறங்குகிறேன் அவருக்கு இந்த வெற்றிக்கனியை நிச்சயம் கொண்டு சேர்ப்பேன்.
தமிழக சட்டசபை சட்டசபை போலவா நடக்கிறது. படிக்க தெரியாதவர்கள் எல்லாம் சட்டசபையில் உள்ளார்கள். கடந்த தேர்தலில் சத்தியபாமா 16 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்ற கேள்விக்கு அவரின் பெயர் ஒன்றே போதும் நாங்கள் வெற்றி பெற என தெரிவித்தார்.
