Headlines

17 நாய்கள் மர்ம மரணம் : விசாரணை நடத்த விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை

17 நாய்கள் மர்ம மரணம் : விசாரணை நடத்த விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி 5வது மண்டலத்திற்கு உட்பட்ட மாடம்பாக்கம் பகுதியில் 17 தெருநாய்கள் வாயில் ரத்தம் வடிந்து மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் விலங்கின ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் இந்திரா நகர், பத்மாவதி நகர், யஷ்வந்த் நகர், எல். எஸ் நகர், எல் எஸ் கே நகர், போன்ற சுற்று வட்டார பகுதிகளில் 17க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் வாயில் ரத்தம் வடிந்தபடி மர்மமான முறையில் இறந்து கிடந்தது.

இதை கண்ட பொதுமக்கள் தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தார் பின்னர் அங்கு வந்த அரசு அதிகாரிகள் இறந்த கிடந்த 17 நாய்கள் உடலை மீட்டு வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தாம்பரம் மாடம்பாக்கம் பகுதியில் 17 நாய்கள் மர்மமான முறையில் இறந்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மர்மமான முறையில் நாய்கள்
இறந்த்து குறித்து விசாரணை நடத்த வேண்டும் என விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *