Headlines

பொய் புகாரில்தலைமையாசிரியை சஸ்பெண்ட் : மாணவிகளின் பெற்றோர் சாலை மறியல்

பொய் புகாரில்தலைமையாசிரியை சஸ்பெண்ட் : மாணவிகளின் பெற்றோர் சாலை மறியல்

ஜோலார்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை சாந்தி பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்து பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர்மாவட்டம், ஜோலார்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி சுமார் 900 மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் சென்ற வாரம் பள்ளியில் ஆய்வு செய்ய வந்த கல்வி அலுவலர் வகுப்பிலிருந்த ஆசிரியரை வெளியேற்றி விட்டு, தலைமையாசிரியர் நிதிவசூல் செய்தார் என மாணவிகளை வற்புறுத்தி கையெழுத்து வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று
பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி பணியிடை நீக்கம் செய்யப்ட்டதாக தகவல் வெளியானது.

இதையடுத்து,
பெற்றோர்கள் மற்றும் மாணவிகள் சாலை மறியல் ஈடுபடுவதாக இருந்த நிலையில், அங்கு வந்த திருப்பத்தூர் ஜோலார்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பள்ளி மாணவர் உடனடியாக பள்ளிக்குச் செல்லுங்கள் என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பள்ளி மாணவிகள் அனைவரும் பள்ளிக்குச் சென்றனர்.

பின்னர் பள்ளி மாணவிகளின் பெற்றோர் திடீரென நாட்றம்பள்ளி செல்லும் சாலையில் சாலை மறியல் ஈடுபட்டனர்.

பொய்யான புகாரில் தலைமையாசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்தும், மீண்டும் அவரை பள்ளியில் பணி அமர்த்த கோரியும்
சுமார் 200க்கும் மேற்பட்டோர் பெற்றோர்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பின்னர் திருப்பத்தூர் துணை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி சம்பவ இடத்திற்கு வந்து, பொதுமக்கள் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கல்வி அதிகாரிகளிடம் தான் பேசி நடவடிக்கை எடுப்பதாக
அவர் அளித்த உறுதிமொழியை அடுத்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *