Headlines

எங்கள் அக்கா, தங்கைகளுக்கு பிடித்த மாதிரி சேலைகள் தயாரித்துள்ளோம் – அமைச்சர் விஜய் பாலாஜி

எங்கள் அக்கா, தங்கைகளுக்கு பிடித்த மாதிரி சேலைகள் தயாரித்துள்ளோம் - அமைச்சர் விஜய் பாலாஜி

வேலூர் மாவட்டம், காட்பாடி டவுன், அரசு விளையாட்டு மைதானம் வளாகத்தில், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை தமிழ் நாடு மாநில கதர், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் விஜய் பாலாஜி இன்று விளையாட்டு மைதானத்தில் துவக்கி வைத்தார்.

இந்த விளையாட்டு போட்டிகளில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர், வேலூர் மற்றும் காட்பாடி சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த
தமிழ் நாடு கைத்தறி, கதர் மற்றும் துணி நூல் துறை அமைச்சர் விஜய் பாலாஜி கூறுகையில்,

தற்பொழுது தலா ஒரு கோடியே 77 லட்சம் வேட்டி சேலைகளை தயாரிக்க வருவாய் துறையிலிருந்து தெரிவித்துள்ளார்கள்.

சேலைகளை பொறுத்தவரை எங்கள் அக்கா, தங்கைகளுக்கு பிடித்த மாதிரி வெள்ளி ஜரிகை வைத்தது போன்று தயாரித்து உள்ளோம். கண்டிப்பா மக்கள் விரும்புவது போல் அவை இருக்கும். என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *