தமிழகத்தில் 27 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் சாய் குமார் உத்தரவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறையின் முதன்மைச் செயலாளராக பிரதாப் யாதவும்,
கைத்தறி, ஜவுளி மற்றும் காதி துறையின் செயலாளராக லில்லியும்,
பள்ளிக்கல்வித்துறை செயலாளராக இன்னசென்ட் திவ்யாவும்,
வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமைச் செயலாளராக சந்திர மோகனும்,
அச்சு மற்றும் எழுதுபொருள் துறையின் ஆணையராக சரவண செல்வராஜும்,
குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் ஆணையராக அஜய் யாதவும்,
பால் உற்பத்தி மற்றும் பால் வளத்துறை இயக்குநராக சிவராசுவும்,
சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராக சிவானந்தமும்,
டான்சி நிறுவன கூடுதல் தலைமைச் செயலாளராக முருகானந்தமும்,
தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி நிறுவன முதன்மைச் செயலாளராக வெங்கடேஷும்,
தமிழ்நாடு கனிமவள நிறுவன நிர்வாக இயக்குநராக கந்தசாமியும்,
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநராக கவிதா ராமுவும்,
தாட்கோ நிறுவன நிர்வாக இயக்குநராக செந்தில் ராஜூம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த சரண்யா அரி விருதுநகர் மாவட்ட ஆட்சியராகவும், பொன்னேரி சார் ஆட்சியராக இருந்த அப்துல் ரஸீக் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராகவும், செங்கல்பட்டு சார் ஆட்சியராக இருந்த நல்லசிவன் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராகவும், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ரவிக்குமார் வேளாண்மை-உழவர் நலத்துறை இணைச் செயலாளராகவும், உதகமண்டலத்தில் சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் திட்ட இயக்குநராக இருந்த சங்கீதா கோவை வணிகவரித்துறை இணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுலாத்துறை இயக்குநர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநருமான ஜெயசீலன், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராகவும், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் இருந்த சுகபுத்ரா, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் செயல் இயக்குநராகவும், கோவை வணிகவரித்துறை இணை ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவராவ், பெருநகர சென்னை மாநகராட்சியின் துணை ஆணையராக (சுகாதாரம்) நியமிக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த வீர பிரதாப் சிங் சிப்காட் நிறுவனத்தின் செயல் இயக்குநராகவும், திருச்சி மண்டல இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக இருந்த பொன்மணி, திருச்சி மாநகராட்சி ஆணையராகவும், சிப்காட் செயல் இயக்குநராக இருந்த கேத்தரின் சரண்யா, வேலூர் மாநகராட்சி ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்து அறநிலையத்துறை தனியாக தற்போது பிரிக்கப்பட்டுள்ளது. முன்பு சுற்றுலாத்துறையுடன் இணைந்து இருந்தது. தவெக ஆட்சிக்கு வந்தவுடன் இந்து அறநிலையத்துறை வணிக வரித்துறையுடன் இணைக்கப்பட்டது. தற்போது அந்த துறை தனியாக இயங்கும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது செய்தித்துறை செயலாளராக உள்ள ராஜாராமன், இந்த துறையை கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
