நாட்டிலேயே முதல்முறையாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், AI மூலம் மக்களுக்காக அறிமுகப்படுத்தப்படுத்தியுள்ள வசதி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரியாக கடந்த 2017ம் ஆண்டு நியமிக்கப்பட்ட தினேஷ்குமார் திண்டுக்கல், தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றி கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 14 வது கலெக்டராக பொறுப்பேற்றார். தூத்துக்குடியில் பணியாற்றிய போது தேர்தல் ஆணையத்தின் சார்பில் புது வாக்காளர்களை அதிக அளவில் சேர்த்தமைக்காக சிறந்த தேர்தல் அதிகாரி என்ற விருதையும் பெற்ற இவர் கடந்த 2025ம் ஆண்டு ஜூன் மாதம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்டதற்கான தமிழக அரசின் விருதையும் பெற்றார்.
இதற்கிடையில் 2024ம் ஆண்டு மதுரை மாநகராட்சி ஆணையராக இருந்த போது மாநகராட்சியில் நடைபெற்ற ரூ.1.5 கோடி முதல் ரூ.200 கோடி வரையிலான சொத்துவரி முறைகேட்டை கண்டுபிடித்து வெளிக்கொண்டு வந்ததும் இவர் தான்.
இந்த முறைகேடு தொடர்பாக தினேஷ்குமார் 2024 செப்டம்பர் 6 அன்று மாநகரக் காவல் துறையில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்ததுடன் முறைகேட்டில் தொடர்புடைய 5 மண்டலங்களைச் சேர்ந்த பில் கலெக்டர்கள் மற்றும் கணினி ஆபரேட்டர்களை உடனடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
இந்த ஊழல் தொடர்பாக மதுரை மாநகராட்சி மேயராக இருந்த இந்திராணி கணவர் பொன்வசந்த் உட்பட 19க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். திமுக மேயர் இந்திராணி மற்றும் 5 மண்டலத் தலைவர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொறுப்பேற்றது முதலே மககளின் அடிப்படை தேவைகளில் அதிக கவனம் செலுத்தி வந்த கலெக்டர் தினேஷ்குமார் கடந்த ஆகஸ்டு 15ம் தேதி அறிவிக்கப்பட்ட தமிழக அரசின் விருதுகளில், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சிறப்பாக செயல்பட்டதற்காக சிறந்த கலெக்டர் விருதையும் தட்டி தூக்கினார்.
இந்த நிலயில் தமிழகத்திலேயே முதன்முறையாக, ஏஐ மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட புது வசதி ஒன்று பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஆந்திர கர்நாடக மாநிலங்களை ஒட்டியுள்ளதால் தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்களும் அதிகளவில் உள்ளனர்.
கிருஷ்ணகிரி கலெடக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் பெரும்பாலானோர் தங்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுக்க சிரமப்பட்டு வந்தனர்.
அந்த சிரமத்தை குறைக்கும் வகையில் கலெக்டர் தினேஷ்குமார் பொறுப்பேற்ற உடனேயே, ஊழியர்கள் மூலம் இலவசமாக கோரிக்கை மனு எழுதி கொடுக்கும் மையத்தை உருவாக்கினார்.
இருப்பினும் திங்கட்கிழமைகளில் மட்டும் மனு அளிப்போர் எண்ணிக்கை 800க்கும் மேலாக அதிகரித்து வந்த நிலையில், பொதுமக்களிடம் மனுக்களை பெற்று சீல் வைத்து, கணினியில் பதிவேற்றி அதனை சம்ப்ந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைப்பதற்கு நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் காத்திருக்க வேண்டி இருந்தது.
இந்த நிலையில் ஏஐ பயன்பாடு அனைத்து துறைகளிலும் அதிகரித்து வரும் நிலையில் ஏஐ தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி பொதுமக்கள் மனு அளிக்கும் முறையை கடந்த ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தினேஷ்குமார் துவக்கி வைத்தார்.
அதாவது தமிழகத்திலேயே முன்னோட்டமாக ஏஐ தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி, மக்கள் எழுதி வரும் கோரிக்கை மனுக்களை ஸ்கேன் செய்தும், எழுத படிக்க தெரியாதவர்கள் வாய்ஸ் மூலமும் பதிவேற்றுவதையும் ஊழியர்கள் உதவியுடன் பதிவேற்றும் முறையை அறிமுகப்படுத்தினார்.
இது குறித்து பேசிய கலெடக்ர் தினேஷ்குமார், மாவட்டத்தில், ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று, மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் நடைபெற்று வருகிறது. இம்முகாமில் பொதுமக்களிடமிருந்து, 500 முதல் 800 வரை கோரிக்கை மனுக்கள் பெறப்படுகின்றது.
பொதுமக்களின் சிரமங்களைப் குறைக்கவும், அவர்கள் அளிக்கும் மனுவினை உடனுக்குடன் பதிவேற்றம் செய்வதற்காகவும், ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மனு எதுவும் எடுத்து வராத பட்சத்தில், அவர்களுடைய கோரிக்கையை குரல் வழி உள்ளீடு மூலமாக ஒரு மனுவாக மாற்றித் தரும் ஏஐ தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை நிலம் தொடர்பு, சாலை வசதி, கழிவுநீர் வாய்க்கால் வசதி, கழிப்பறை வசதி, வீடு மற்றும் இதர நலத்திட்ட மனுக்கள் என பிரிக்கப்பட்டு, அவற்றை செயலி மூலம் பதிவேற்றம் செய்து, அந்த மனுவிற்கான குறியீடு எண்களை பொதுமக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக மனுக்களை பதிவேற்றம் செய்ய 1 நிமிடம் 20 வினாடிi எடுத்துக்கொள்கிறது. ஆனால் ஏஐ தொழில் நுட்பத்தில் 10 – 15 வினாடியில் பதிவேற்றம் செய்து, முதல்வரின் முகவரி செயலியின் மூலம் மனுக்களுக்கான குறியீடு எண் பெறப்பட்டு, அதற்கான ஒப்புகை சீட்டு மனுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டிலேயே முதன் முதலாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தி மனுக்கள் பெறும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இத்திட்டம் குறித்து தமிழக முதல்வரிடம் சமர்பித்து, தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
மக்களின் நலனை கருத்தில் கொண்டு AI மூலம் மக்களின் சிரமங்களை குரைக்க தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில் பொதுமக்கள் கலெக்டரை பாராட்டி வருகின்றனர்.
