தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே செட்டிகுறிச்சி பகுதியில் செயல்பட்டு வரும் கல்குவாரி மற்றும் கிரஷர்கள் காரணமாக விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நிலத்தடி நீர்மட்டம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
வெடிகள் வெடிப்பதால் வெடிப்புகள் ஏற்பட்டு வீடுகளும் சேதம் அடைந்து வருவதாகவும், மேலும் கிரஷர்களில் இருந்து வெளியேறும் அதிகளவு தூசி காரணமாக பொது மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுவது மட்டுமின்றி பல்வேறு நோய்களினால் பாதிக்கப்படும் சூழ்நிலை இருப்பதால், கல்குவாரி மற்றும் கிரஷர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அதன் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதனை வலியுறுத்தி செட்டுக்குறிச்சி கிராம மக்கள், ஊராட்சி மன்றம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கருப்புக்கொடி பிடித்து போராட முயன்ற போது, போலீசார் தடுத்ததால் கருப்புக்கொடி இல்லாமல் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது கல்குவாரி மற்றும் கிரசர்களை மூட வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
