Headlines

சொகுசு கார்களில் கஞ்சா கடத்தல் : பிடிபட்ட 3 பேர், தப்பியோடிய 3 பேருக்கு வலை

சொகுசு கார்களில் கஞ்சா கடத்தல் : பிடிபட்ட 3 பேர், தப்பியோடிய 3 பேருக்கு வலை

பெரம்பலூர் அருகே நடந்த வாகன சோதனையில் ரூ.1.50 கோடி மதிப்பிலான 235 கிலோ கஞ்சா மற்றும் இரண்டு சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தப்பியோடிய மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னையில் இருந்து இனோவா கார் மற்றும் சுசுகி எர்டிகா காரில் கஞ்சா கடத்தி வருவதாக பெரம்பலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே உள்ள தண்ணீர் பந்தல் என்ற பகுதியில் பெரம்பலூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சென்னையில் இருந்து டி.என். 10 CB 6809 என்ற இனோவா மற்றும் TN 02 CH 3795 என்ற சுசுகி பொலிரோ கார்களைநிறுத்தி சோதனை செய்ததில் ஏழு சூட் கேஸ்சில் 235 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது.

கைப்பற்றப்பட்ட சுமார் 235 கிலோ கஞ்சாவின் சர்வதேச மதிப்பு ஒரு கோடியே 50 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என கூறப்படுகிறது.

சென்னையில் இருந்து ராமேஸ்வரம் கடத்திச் சென்று அங்கிருந்து இலங்கைக்கு கடத்தி செல்ல இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட அருண்குமார், பிரதீப், விக்னேஷ் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் மற்றொரு காரில் இருந்து தப்பி ஓடிய மூன்று பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இச்சம்பவத்தால் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *