Headlines

ஆட்டுகுட்டியை மீட்க முயற்சித்து 80 அடி ஆழ கிணற்றில் சிக்கியஇளைஞர் : திருப்பத்தூர் அருகே பரபரப்பு

ஆட்டுகுட்டியை மீட்க முயற்சித்து 80 அடி ஆழ கிணற்றில் சிக்கியஇளைஞர் : திருப்பத்தூர் அருகே பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த லக்கிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த பன்னீர் மகன் ஹரிஹரன் (27). இவருக்கு சொந்தமான ஆட்டுக்குட்டி ஒன்று அவரது நிலத்தில் உள்ள கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது.

இந்நிலையில் ஆட்டுக்குட்டியை மீட்பதற்காக ஹரிஹரன் கிணற்றில் இறங்கியுள்ளார்.

பின்னர் கிணற்றில் இருந்து மேலே ஏற முயன்றபோது அவரால் ஏற முடியாமல் போனது.

இதனால் சுமார் 80 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள்ளேயே ஹரிஹரன் சிக்கி தவித்தார்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக திருப்பத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் சிக்கியிருந்த ஹரிஹரனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

சிறிது நேரம் போராடி, தீயணைப்பு வீரர்கள் ஹரிஹரனை பத்திரமாக கிணற்றில் இருந்து மீட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *