Headlines

விபத்தில் மாஜி ஊராட்சி மன்ற து.தலைவர் உயிரிழப்பு : கொலை செய்யப்பட்டதாக கூறி கிராம மக்கள் சாலைமறியல்

விபத்தில் மாஜி ஊராட்சி மன்ற து.தலைவர் உயிரிழப்பு : கொலை செய்யப்பட்டதாக கூறி கிராம மக்கள் சாலைமறியல்

திருச்செங்கோடு தாலுகா மல்ல சமுத்திரத்தை அடுத்த காளிபட்டியை அடுத்த பள்ளக்குழி கிராமம் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக இருந்தவர் முருகன் 40.

இவர் முனியப்பன் கோவில் திருவிழாவுக்காக வசூல் செய்ய இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது மண் ஏற்றி வந்த டிராக்டர் டூவிலர் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்.
அவருடன் வந்த ஸ்ரீகாந்த் 24 என்பவர் படுகாயமடைந்தார்.

இந்நிலையில், மண் திருட்டில் ஈடுபட்டவர்களை தட்டிக் கேட்க முயன்றதால், டிராக்டர் மோதி முருகன் கொலை செய்யப்பட்டதாக கூறி அவரின் சடலத்துடன் ஊர் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் உறவினர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பல மணி நேரங்களாக தொடர்ந்து நடைபெறும் போராட்டத்தால் பள்ளக்குழி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் பர்மிட் உடன் மண் ஏற்றி வந்த டிராக்டரை முந்தி செல்ல முயன்றபோது முருகன் நிலை தடுமாறி டிராக்டரின் பின் சக்கரத்தில் விழுந்து அடிபட்டதால் உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறி
ஓட்டி வந்த டிராக்டரின் உரிமையாளர் லட்சுமணன் காவேரி
மல்லசமுத்திரம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *