மணலி அருகே மாத்தூரில் தாயம் விளையாடியதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணலி அருகே மதுபானக் கடை பகுதியில் இளைஞர்கள் சிலர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்து வெளியே வந்த மூன்று பேர், ராம்ராஜ் என்ற இளைஞரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர்.
இதை தடுக்க முயன்ற அவரது நண்பர்கள் இருவரையும் அந்த கும்பல் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் ராம்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
படுகாயமடைந்த அவரது நண்பர்கள் இருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பு தாய்பாஸ் விளையாடியதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைமறைவான மூன்று பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
