திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த ஒரு நிகழ்வை மட்டும் வைத்துக்கொண்டு அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் அரசு உள்ளது என கம்யூனிஸ்ட் கட்சியினர் சொல்வது வேடிக்கையாக உள்ளது என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில், ரோட்டரி கிளப் சார்பில் சிறப்பு குழந்தைகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. 6 வயது முதல் 21 வயது வரையிலான சிறப்பு குழந்தைகள் இந்த போட்டியில் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இந்த போட்டியினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார்.
குழந்தைகளை உற்சாகப்படுத்தும் விதமாக பெற்றோர்களும் குழந்தைகளுடன் ஓடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. வெற்றி பெற்ற சிறப்பு குழந்தைகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண் ராஜ் பதக்கம் வழங்கி கௌரவித்தார்.
இதற்கு முன்னதாக மேடையில் பேசிய அமைச்சர் அருண் ராஜ்,
உலகம் அனைவருக்கும் சமமானது, அனைவருக்கும் சம வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதுதான் உண்மையான சமூக நீதி.
சிறப்பு குழந்தையின் இயற்கையான வாழ்வையே மறுவாழ்வு என்போம், இப்படித்தான் நம் சமூகத்தின் கட்டமைப்பாக உள்ளது.
அமைச்சர் சொன்ன உண்மை கதை
அரியானா- வில் எளிய குடும்பத்தில் பிறந்த குழந்தைக்கு இரண்டு வயதில்தான் சிறப்பு தேவை உள்ளது எனக்கு கண்டறியப்பட்டது. இந்த உற்றார் உறவினர்கள் இந்த குழந்தை பெரிய சுமையாக இருப்பார் என கூறி குழந்தையை ஏன் கருணை கொலை செய்யக்கூடாது என்ற அளவிற்கு யோசனைகளை முன்னெடுத்தனர்.
கருணைகொலைக்கான ஆலோசனைகளையும் தாயிடம் வழங்கினர்.
ஆனால் அந்த தாய் சிறப்பு பயிற்சி கொடுக்கக்கூடிய பள்ளியில் சேர்த்தார். பிறகு பல ஆண்டுகள் கழித்து அதே குழந்தை பற்றிய செய்தி சர்வதேச அளவில் வெளியானது. அது பாரா ஒலிம்பிக்கின் கைப்பந்து போட்டியில் அவர் பங்கு பெற்ற அணி இரண்டாம் இடம் பிடித்து சர்வதேச அளவில் கவனம் பெற்று அசத்தினார் என்பது தான். அந்த போட்டியின் மூலம் மிகப்பெரிய தொகை கிடைத்தது மேலும் மருத்துவ தேவையும் பூர்த்தி செய்ய முடிந்தது.
இதிலிருந்து நாம் பார்ப்பது என்னவென்றால் ஒவ்வொரு சிறப்பு குழந்தைக்கும் தனி திறமை உள்ளது. ஒவ்வொரு குழந்தையும் சாதனையாளர் தான் இந்த குழந்தைகளுக்கான தனி திறமையை கண்டறிய வேண்டியது நமது பொறுப்பு தான்.
இந்த உலகம் அனைவருக்கும் சமமானது தான். அனைவருக்கும் சம வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.
அவர்களுக்கு நாம் கருணையை கொடுக்க வேண்டிய தேவை இல்லை அவர்களுக்கு தேவையான வாய்ப்பைக் கொடுத்தாலே போதுமானது.
ஏழையின் சிரிப்பில் இறைவனை பார்க்கிறேன் என அண்ணா கூறினார்,
ஒரு குழந்தை ஓடி வந்து அவரது மொழியில் CM என கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் உண்மையாகவே மகிழ்ச்சியாக இருந்தது.
சிறப்பு குழந்தைகளை சிறு வயதிலேயே கண்டறிய முடியும் அரசு துறையில் இதற்கான திட்டங்களும் உள்ளது.
பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்ற தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை அடிப்படையில் அனைவரும் சேர்ந்து அனைவருக்கும் சம வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்போம் என்ற உறுதிமொழியை ஏற்போம் என்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அருண்ராஜ் கூறுகையில்,
திண்டுக்கல் மாவட்டத்தில் இடதுசாரி அமைப்புகளை சேர்ந்த மாணவர்களின் விவரங்களை எடுக்கச் சொன்னதை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டில் அரசு ஆட்சியாக இல்லாமல் அரசு அதிகாரிகள் ஆட்சி என கம்யூனிஸ்டுகள் நேற்று விமர்சனம் செய்தது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு,
கடந்த திமுக ஆட்சியில் தான் அதிகாரிகளின் ஆட்சி நடைபெற்றது.
அப்போதைய முதலமைச்சருக்கு என்ன நடப்பது என்றே தெரியாமல் அதிகாரிகள் சொல்வது தான் உலகம் என்று நம்பிய ஆட்சி நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் இடதுசாரி அமைப்புகளைச் சார்ந்த மாணவர்களின் விவரங்களை சேகரிக்க சொன்னது அரசின் கவனத்திற்கு வராமல் நடைபெற்றது என்பதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டது.
அந்த சுற்றறிக்கை அனுப்பியவர்கள் மீது அரசு நடவடிக்கையும் எடுத்துள்ளது. இந்த ஒரு நிகழ்வை மட்டும் வைத்துக்கொண்டு அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் அரசு உள்ளது என சொல்வதை வேடிக்கையாக உள்ளது.
அரசு அதிகாரிகள் ,வெளிப்படையான அரசு அமைந்துள்ளது என்பதை அவர்கள் பணியாற்றுவதற்கான வாய்ப்பாக பார்க்கின்றனர்.ஒரு சிலர் செய்யும் தவறுகளினால் மொத்தத்தையும் தவறு என்ன சொல்ல முடியாது. என்றார்.
