பாஜகவிற்கு என் மீது என்ன காழ்ப்புணர்ச்சி என்று தெரியவில்லை, அதனால்தான் தேர்தல் ஆணையம் மூலமாக மூன்று ஆண்டுகளுக்கு நான் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று தடை விதித்துள்ளனர் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மவுலானா தெரிவித்தார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மவுலானா, இந்திய தேர்தல் ஆணையம் தேர்தலின் போது செலவு செய்யப்பட்ட கணக்கு வழக்குகளை முறையாக தாக்கல் செய்யவில்லை எனக் கூறி மூன்று ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதித்துள்ளது.
ஆனால் இந்திய தேர்தல் ஆணையம் காங்கி்ரஸ் தலைவர்
ராகுல் காந்தி பிரச்சாரத்தின் முழு செலவை தன் கணக்கில் காட்டியுள்ளதாகவும், பாஜக தலைவர்கள் வந்ததற்கான கணக்கை வேட்பாளர்களின் கணக்கில் தனித்தனியாக பிரித்து காட்டியுள்ளனர். ஆனால் தனது கணக்கில் முழு செலவையும் சேர்த்துள்ளனர்.என்றார்.
காலம் தாழ்த்தி தனக்கு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது, இது செல்லாது என்றும் கூறியவர், பாஜகவிற்கு தன் மீது என்ன காழ்ப்புணர்ச்சி என்று தெரியவில்லை, அதனால்தான் இப்படி ஒரு உத்தரவை இந்திய தேர்தல் ஆணையம் கொடுத்துள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மவுலானா தெரிவித்தார்.
மேலும் வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் யார் பிரதமர் வேட்பாளர் என்ற கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
