Headlines

சட்டவிரோத பண பிடித்தம் : போராட்டம் அறிவித்த பல்கலைகழக தொழிலாளர்கள்

சட்டவிரோத பண பிடித்தம் : போராட்டம் அறிவித்த பல்கலைகழக தொழிலாளர்கள்

பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பள பணத்தில், சட்ட விரோதமாக பணம் பிடித்தம் செய்யும், அதிகாரிகளை கன்டித்து வரும் 7ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது.

கோவை மருதமலையில் உள்ள
பாரதியார்
பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், கடந்த மாதம் தொழிலாளர்களின் சம்பள கணக்கிலிருந்து பாரதியார் பல்கலைக்கழக நிர்வாகம், ரூபாய் 1000 முதல் 3000 வரை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, சட்ட விரோதமாக பிடித்தம் செய்துள்ளது.

இது தொடர்பாக பதிவாளரிடம் கேட்டபோது இ.எஸ்ஐ நிறுவனத்திற்கு கட்டிய தொகை என்று குறிப்பிட்டார். அது சட்டப்படி தவறு என்று சங்கத்தால் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும் கடந்த 11ம் தேதி நடந்த குறை தீர்ப்பு கூட்டத்தில் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த பணத்தை ஆட்சி குழு கூட்டத்தில் அனுமதி பெற்று திருப்பி செலுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் வருகின்ற மாதங்களில் அவ்வாறான அபராத தொகைகளை பிடிக்க மாட்டோம் என்றும் இஎஸ்ஐ சட்டத்தால் அனுமதிக்க கூடிய 0.75% மட்டுமே பிடித்தம் செய்யப்படும் என்று உறுதியளித்தார்.

ஆனால் இந்த மாதம் 2 ம் தேதி அனைவருக்கும் சம்பளம் போடப்பட்ட போது இ.எஸ்.ஐ கான அபராதத் தொகை ரூபாய் 500 பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

பதிவாளர் சொன்ன அந்த வாக்குறுதியை காப்பாற்றவில்லை என்பதை தொழிற்சங்கம் தரப்பில் கூறப்பட்டது.

இது தொடர்பாக சங்கம் கோவை மாவட்ட இ.எஸ்.ஐ துணை இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்களிடம் தொடர்பு கொண்டு பேசிய போது அவர்கள் பாரதியார் பல்கலைக்கழகத்தில் நிதி அலுவலகத்தில் இவ்வாறு பிடித்தம் செய்வது சட்டப்படி தவறு ஏற்கப்பட மாட்டாது என்றும், அவ்வாறு தொடர்ந்து பிடிக்கப்படும் பட்சத்தில் உரிய அனுமதி பெற்று, ஆய்வு நடத்தி அதனை தொழிலாளர்களுக்கு திருப்பி பெற்று வழங்கி விடுவோம், மேலும் அவ்வாறு செய்தற்காக அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தனர்.

ஆனால் அதையும் மீறி தொழிலாளர்களிடம் 500 ரூபாய் பிடித்தம் செய்துள்ளனர்.
அதற்கு பதிவாளரும் ஒப்புதல் கொடுத்துள்ளார் இதனை தொழிற்சங்கம் கண்டிப்பதுடன், அதனால், வரும் 7ம் தேதி, முதல் கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் மற்றும் தொடர் போராட்டங்களும் நடத்தி பிடித்த உள்ளாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் சங்க பொதுச்செயலாளர் ரமேஷ் குமார், சங்க தலைவர் சிந்தாமணி மற்றும் செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *