Headlines

நிர்வாணமாக வந்து பெண்களின் உள்ளாடைகள் திருட்டு : மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வைரல்

நிர்வாணமாக வந்து பெண்களின் உள்ளாடைகள் திருட்டு : மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வைரல்

தருமபுரியில் இரவு நேரத்தில் நிர்வாணமாக வந்து பெண்களின் உள்ளாடைகளை திருடிச் செல்லும் மர்ம நபர் குறித்த சிசிடிவி காட்சி சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே எர்ரப்பட்டி கிராமத்தில், இரவு நேரங்களில் பெண்களின் உள்ளாடைகளை திருடிச் செல்லும் மர்ம நபரால் குடியிருப்பு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எரப்பட்டி பகுதியில்
பெட்ரோல் பங்க் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில், இரவு நேரங்களில் மர்ம நபர்கள் சுற்றித் திரிவதாகவும், வீடுகளை நோட்டமிட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் நிர்வாணமாக வந்து வீட்டின் வெளியே காய வைத்திருந்த பெண்ணின் உள்ளாடையை திருடி, அதனை அணிந்து கொண்டு செல்லும் காட்சிகள் அங்கிருந்த வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், இரவு நேரங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்த மர்ம நபர் குறித்து அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் சிசிடிவி யில் பதிவாகி உள்ள அந்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *