மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் வருகையொட்டி சாலையின் இருபுறமும் குடியிருப்புகளுக்கு யாரும் செல்லாத முடியாத வகையில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக இன்று முதலமைச்சர் ஜோசப் விஜய் தண்ணீர் திறந்து வைக்கிறார்.
முதலமைச்சர் வருகையையொட்டி மேட்டூர் அணையில் தீவிர பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திறப்பு விழா நடைபெறும் அணையின் வலது கரைக்கு முதலமைச்சர் வரும் சாலையில் இருபுறமும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது.

இதில் சாலையோரத்தில் உள்ள குடியிருப்புகள் மற்றும் இணைப்பு சாலைகளுக்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் யாரும் செல்ல முடியாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருவதால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேட்டூருக்கு வருகை தரும் முதலமைச்சர் விஜயை நேரில் பார்க்க தாங்கள் ஆவலாக உள்ள நிலையில் முதலமைச்சரை பார்க்க முடியாத வகையில் காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து வருவதாகவும் குடியிருப்புவாசிகள் வெளியே சென்று வர முடியாத வகையில் தடுப்புகள் உள்ளத்தால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் வீட்டின் உள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
