Headlines

பாவம் பார்த்த பெண்ணுக்கு நடந்த கொடூரம் : தாம்பரம் அருகே பரபரப்பு

பாவம் பார்த்த பெண்ணுக்கு நடந்த கொடூரம் : தாம்பரம் அருகே பரபரப்பு

தாம்பரம் அருகே மயக்கம் வருவதாக கூறியதால் தண்ணீர் கொண்டுவந்த பெண்ணின் நகையை பறிக்க முயன்று, பெண்ணின் கழுத்தை அறுத்ததுடன் , தன்னுடைய கழுத்தையும் கல்லூரி மாணவர் அறுத்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம், சோமசுந்தரம் தெருவை சேர்ந்தவர் கல்லூரி மாணவர் சிவா (19) பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்,

இன்று பிற்பகல் தனது வீட்டின் எதிரே உள்ள குடியிருப்பு பகுதிக்கு சென்ற சிவா வீட்டில் இருந்த உமா என்ற பெண்ணிடம் தனக்கு மயக்கம் வருவதால் குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்டுள்ளார்,

அந்த பெண் தண்ணீர் கொடுக்க வந்த போது திடிரென பாய்ந்த சிவா அவரின் கழுத்தில் இருந்து தங்க செயினை பறிக்க முயன்றுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த உமா கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த சிவா திடிரென தன் வைத்திருந்த கத்தியால் உமாவின் கழுத்தை அறுத்ததுடன் தான் போலீசிடம் மாட்டிக்கொள்வோம் என்று பயந்து தன்னுடைய கழுத்தையும் அறுத்துள்ளார்.

இதனை கண்டு அக்கம்பக்கத்தினர் உமாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் கழுத்தில் பலத்த காயமடைந்த சிவாவையும் தாம்பரத்தில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சிட்லப்பாக்கம் போலீசார் பொற்றோரிடம் நடத்திய விசார்னையில் சிவா மனநலம் பாதிக்கபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இச்சம்வம் குறித்து உமாவிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்

பட்டபகலில் கல்லூரி மாணவர் நடத்திய இச்சம்பவம் தாம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட பெண்மணி உமா கூறியது:

தன்னிடம் தண்ணீர் கேட்ட போது தண்ணீர் கொண்டுவந்த என் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை அறுக்க வந்தபோது தடுத்து கூச்சலிட்ட போது சிவா தான் வைத்திருந்த கத்தியால் தனது கழுத்தை வெட்டிவிட்டதாக தெரிவித்தார்.
காவல் துறையிடம் இது குறித்து புகார் அளித்து உள்ளதாக தெரிவித்தார்,

தாம்பரம் மருத்துவமனையில் உமாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, தனது கழுத்தை அறுத்துக்கொண்ட சிவாவின் கழுத்து மற்றும் தொண்டை பகுதியில் ஆழமாக கத்தி இறங்கியதால் மேல் சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *