காங்கிரஸ் கட்சியினர் யாரிடமும் நம்பிக்கையாக இருக்க மாட்டார்கள். தி.மு.க.வுடன் 15 ஆண்டுகள் நம்பிக்கையாக இருந்தவர்கள், தற்போது ஒரு நிமிடத்தில் ஓடி வந்துவிட்டார்கள். ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் இல்லை என்பதும், காங்கிரசால் ஆட்சிக்கு வர முடியாது என்பதும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகளுக்கு தெரியும் என நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
நெல்லையில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகையில், கடந்த காலங்களில் சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற்றது.
தான் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதும், அப்போதைய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் நெல்லைக்கு ரூ. 350 கோடியில் புறவழிச்சாலை திட்டம் கொண்டுவரப்பட்டது.
மிகவும் பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் மானூர் பகுதிக்கு அரசு கலைக் கல்லூரி ஒன்றை அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
அதற்கு முன்பாக, மேலப்பாளையத்தில் அன்னை ஹாஜிரா கல்லூரியும், 2011-ல் தான் சட்டமன்ற உறுப்பினராக இல்லாதபோதும் நெல்லைக்கு ரூ. 110 கோடியில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையமும் கொண்டு வரப்பட்டன.
எல்லா கட்சிகளுக்கும் தேவையான திட்டங்களைச் செய்து கொடுங்கள்” என்று அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், இன்றைய சட்டமன்றத்தில் அமைச்சர்கள் உறுப்பினர்களைப் பார்த்து “உன் மாமாவிடம் கேள், உன் அப்பாவிடம் சொல்” என்று தரம் தாழ்ந்து பேசுவது வருத்தமளிக்கிறது.
அமைச்சர்கள் தங்களின் மதத்தைப் போற்றுவதில் தவறில்லை. ஆனால், நடுநிலையாகச் செயல்பட வேண்டிய சட்டமன்றப் பேரவைத் தலைவரே அவைக்குள் ‘நான் ஒரு கிறிஸ்தவன்’ என்று அடையாளப்படுத்துவதும், பிற உறுப்பினர்கள் சாதி அடையாளங்களை முன்னிறுத்துவதும் அவையின் மாண்பைக் குலைக்கிறது.
பிரதம வேட்பாளராக விஜய் இருப்பர் என அமைச்சர்கள் பேசுவதற்கு பதில் அளித்த அவர், நாடகமா? நடக்காத விஷயத்தை பேசலாமா என்று தெரியவில்லை.
தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளுக்கு தெரியும்
ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் இல்லை
இவர்கள் வர முடியாது என்று,
காங்கிரஸ் கட்சிக்காரர்கள் யாரிடம் நம்பிக்கையாக இருக்க மாட்டார்கள்,
திமுகவின் 15 வருடம் நம்பிக்கையாக இருந்தார்கள்
ஒரு நிமிடத்தில் ஓடி வந்து விட்டார்கள்.
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் அறையை மாற்றி அமைக்கும் பணிக்காக ரூ. 5.40 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் எதுவும் கோரப்படவில்லை என அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார். டெண்டர் இன்றி இவ்வளவு பெரிய தொகையை நேரடியாகப் பணிகளுக்கு ஒதுக்கீடு செய்வது கூட்டு ஊழலாகும்.
நான் இந்த தவெக அரசின் 100 நாள் ஆட்சிக்கு மைனஸ் 80 மதிப்பெண் வழங்குகிறேன்,
ஆளும் அரசு தொடர்பு பொய்யான ரீல்ஸ்களை பரப்பி வருகின்றனர்.
தேவையில்லாத பொய் செய்திகள் இளம் தலைமுறையை எதிர்காலத்தை பாதிக்கும் , தனித்தொகுதிகளை ‘சிறப்புத் தொகுதி’ எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட விவகாரத்தில், யாருடைய மனமாவது புண்படும் பட்சத்தில் அந்தப் பெயரை மாற்றுவது நல்ல விஷயம் தான்.
தமிழர்களின் பண்பாடு வீரவிளையாட்டில் ஜல்லிகட்டு ஒன்று, அதனை கொச்சைப்படுத்தி பேசினால் இந்த அரசுக்கு ஒன்றும் தெரியவில்லை என்பதற்கு இதுவே சாட்சி.
இன்றோ நாளையோ அமைச்சர் ஆதவ் அர்ஜுன் பதில் சொல்ல வேண்டும், 2002ல் கோத்திர சம்பவம் நடந்தது அதை பற்றி பேசியிருக்கிறார்.
இதையெல்லாம் சட்டமன்றத்தில் பேச வேண்டிய அவசியம் என்ன வந்துள்ளது நவகாளி சம்பவம் என்ற ஒன்று நடந்தது அப்போது அவர் பிறந்திருக்கவே மாட்டார் .
அதேபோல் கேரளாவில் ஒரு கலவரம் நடந்தது
அதைப் பற்றி சட்டமன்றத்தில் விவாதிக்க தயாரா? என கேள்வி எழுப்பினார்.
மேலும் நெல்லை மட்டுமல்ல நாகர்கோவில் கோவில்பட்டி என தினந்தோறும் தமிழக முழுவதும் கொலைகள் நடந்து வருகிறது எனவே மாநில முழுவதும் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என்று கூறினார்.
