தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட சாலைகளில் வெறிநாய்கள் அதிக அளவில் சுற்றி திரிவதோடு சாலையில் நடந்து செல்லும் பள்ளி மாணவர்கள் சிறுவர்கள் பொதுமக்கள் ஆகியோரை வெறிநாய்கள் துரத்திச் சென்று கடிப்பது தொடர்கதையாக உள்ளது.
இந்நிலையில் கடையநல்லூர் பகுதியில் சாலையில் நடந்து சென்ற சுமார் ஐந்திற்கு மேற்பட்டோரை நேற்று வெறிநாய் ஒன்று துரத்தி சென்று கடித்து குதறியுள்ளது. இதில் காயமடைந்தவர்கள் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மேலக்கடையநல்லூர், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் சாலையில் நடந்து சென்ற மாரியப்பன் (55) 13-வயது சிறுமி உட்பட சுமார் 20- க்கும் மேற்பட்டேரை வெறிநாய் ஒன்று துரத்தி சென்று கடித்து குதறியுள்ளது.

இதில் காயமடைந்தவர்கள் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அடுத்தத்து இரண்டு நாளில் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் வெறிநாய் கடிக்கு உள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக கடையநல்லூர் மற்றும் இதன் சுற்று வட்டாரப் பகுதியில் அதிக அளவில் சுற்றித் திரியும் வெறிநாய்களை கட்டுப்படுத்த வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சியினர் சமூக ஆர்வலர் பலமுறை கோரிக்கை வைத்தும் நகராட்சி நிர்வாகம் வெறி நாய்களை கட்டுப்படுத்த எந்த ஒரு முறையான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என இந்த பகுதிமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
