சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியுடன் சங்கராபுரம் ஊராட்சி இணைக்கப்பட்ட நிலையில்,தனியார் ஒப்பந்ததாரர் மூலம் சம்பளம் வழங்கப்பட்டு வருவதாக கூறி,
நேரடியாக மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் சம்பளம் வழங்க வேண்டும் என்றும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் கோரி, துப்புரவு பணியாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கராபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் வாயிலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பங்கேற்றனர்.

