Headlines

வாக்குமூலத்தை மாற்றிவிட்டனர் : போலீசார் மீது புகார் தெரிவித்த வீ த லீடர் உறுப்பினர்

வாக்குமூலத்தை மாற்றிவிட்டனர் : போலீசார் மீது புகார் தெரிவித்த வீ த லீடர் உறுப்பினர்

குறிஞ்சிப்பாடி போலீசார் தனது வாக்கு மூலத்தை மாற்றி விட்டதாக மர்ம நபர்களால் வெட்டபட்டு படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வீ த லீடர் உறுப்பினர் வெளியிட்டுள்ள வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி குட்டைக்கார தெருவில் வசித்து வருபவர் விஜயகுமார். அவர் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் வீ த லீடர் அமைப்பை சேர்ந்தவர்.

இவர் நேற்று முன் தினம் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டபட்டு படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி தனியார் மருத்துவமனையில் சேர்க்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த விஜயகுமாருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து அறுவை சிகிச்சை முடிந்த நிலையில்,

அவர் தனக்கு என்ன நேர்ந்தது என போலீசாருக்கு படுகாயங்களுடன் இருந்த பொழுது அளித்த வாக்கு மூலத்தில் தான் கஞ்சா போதை நபர்களால் தான் வெட்டபட்டதாக கூறினேன்.
ஆனால் அது குறித்த வாக்கு மூலத்தை குறிஞ்சிப்பாடி போலீசார் மறைத்து மதுபோதை நபர்களால் தான் வெட்டபட்டதாக கூறிவருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

என்ன நடந்தது என ஊடகங்களுக்கும், வீ த லீடர் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலைக்கும் தெரவிக்கும் விதமாக அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *