சங்கரன்கோவில் அருகே சிவகிரியில் விவசாயியை
பாம்பு பிடிக்கும் கம்பியால் தாக்கிய வனத்துறையினர் இருவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகிரி குமாரபுரம் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார்23 ,விவசாயி யான இவர் பால் வியாபாரமும் செய்து வருகிறார். இந்நிலையில் நேதாஜி வீதியில் ராம்குமார் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்றுள்ளார். அப்போது எங்கள் வாகனத்தின் அருகே நிறுத்தக்கூடாது என
வேட்டைத்தடுப்பு காவலர் பாலா மற்றும் இருவர் ஆபாசமாக பேசியுள்ளனர். மேலும் பாம்பு பிடிக்கும் இரும்பு கம்பியால் ராம்குமாரை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலால் மண்டை உடைக்கப்பட்ட ராம்குமார் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் சிவகிரி போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து வனக்காவலர் ஸ்ரீமுருகன், வேட்டைத்தடுப்பு காவலர் பாலா ஆகிய இருவரையும் சிவகிரி காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
