Headlines

ஊரை விட்டு ஒதுக்கி வைத்த புகார் : அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை

ஊரை விட்டு ஒதுக்கி வைத்த புகார் : அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சின்னாண்டிக்குழி கிராமத்தில், ஆறுமுகசாமி மற்றும் அவரது குடும்பத்தினரை கிராம மக்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து புவனகிரி வட்டாட்சியர் நேரில் சென்று விசாரணை நடத்திய நிலையில், இரு தரப்பினருக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தை வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் நடைபெற்றது.

இரு தரப்பினரின் கருத்துகளையும் கேட்டறிந்த வட்டாட்சியர், அரசுக்கு சொந்தமான இடம் தொடர்பாக இறுதி முடிவை அரசு மட்டுமே எடுக்க முடியும் என்றனர்.

கிராமத்தின் அமைதி மற்றும் ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்று அறிவுறுத்தினார்.
மேலும், அனைவரும் வழக்கம்போல் தங்களது பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.
இந்த பேச்சுவார்த்தையின்போது கிராமத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *