பொள்ளாச்சியில் மகனின் பிறந்த நாளையொட்டி பட்டா கத்தியில் கேக் வெட்டி கொண்டாடிய தமிழக வெற்றிக் கழக நிர்வாகியின் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
பொள்ளாச்சி கோவை சாலை சி டி சி மேடு பகுதி சேர்ந்தவர் சுரேஷ். இவர் தமிழக வெற்றி கழகத்தில் நிர்வாகியாக உள்ளார். இந்நிலையில் தனது மகனின் பிறந்த நாள் முன்னிட்டு அப்பகுதி ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுடன் ஆம்புலன்ஸ் முன் கேக் வைத்து பட்டாகத்தியால் வெட்டி கொண்டாடியுள்ளார்.
இந்த நிகழ்வு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் நவீன் குமார் தலைமையில் மகாலிங்கபுரம் காவல் நிலைய ஆய்வாளர் செல்ல மணி விசாரணை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
