நேபாள நாட்டின் கோசி ஆற்றில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த 3 யானைகள் மற்றும் 2 குட்டியானைகளை வனத்துறையினர் மீட்கும் காட்சிகள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.
கோசி ஆற்றில் ஏற்பட்ட பெரு வெள்ள நீரோட்டத்தில் சிக்கிய மூன்று வயதான யானைகளும் இரண்டு இளம் குட்டிகளும்
பஹ்ரைச்சில் உள்ள கிர்ஜாபுரி தடுப்பணையை நோக்கி கெருவா-கௌரியாலா ஆற்றுப் பகுதிக்குள் அடித்துச் செல்லப்பட்டன.
வேகமாகப் பாயும் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த இரண்டு குட்டிகளையும் வயதான யானைகள் தைரியமாகப் பாதுகாத்து, அவற்றின் அருகிலேயே இருந்தன

வனத்துறை மற்றும் நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் விரைவாக ஒருங்கிணைந்து செயல்பட்டு, அபாயகரமான நீரின் வேகத்தைக் குறைப்பதற்காக தடுப்பணையின் கதவுகளைச் சிறிது நேரம் மூடினர்.
நீரோட்டம் குறைந்ததும், வயதுவந்த யானைகள் குட்டிகளை ஆற்றங்கரைக்கு பாதுகாப்பாக வழிநடத்தியது பார்ப்பவர் மனங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
மேலும் உள்ளூர் வனக் குழுவினர் அந்த யானைக் கூட்டத்தைப் பாதுகாப்பாக மீண்டும் வனப்பகுதிக்குள் வழி நடத்திச் சென்றனர்.
