Headlines

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழப்பு : குடியாத்தம் அருகே சோகம்

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழப்பு : குடியாத்தம் அருகே சோகம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த போஜனாபுரம் ஊராட்சி சுந்தரகுட்டை பகுதியை சேர்ந்தவர்கள் டிரைவர் மாதேஷ் (30) ஜெயலட்சுமி (28) தம்பதி.

இத்தம்பதிக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் 3 வது குழந்தையான சிறுவன் ஆகாஷ் (3) நேற்று மாலை வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்பொழுது அங்கு திறந்த நிலையில் இருந்த தண்ணீர் தொட்டியில் ஆகாஷ் தவறி விழுந்துள்ளார்.

குழந்தையின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஆகாஷை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஆகாஷ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து சிறுவனின் உடலை உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து குடியாத்தம் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3 வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *