Headlines

பத்திரிக்கைகள் தான் எங்களை பிரிக்க நினைக்கின்றனர் : மாணிக்கம் தாகூர்

பத்திரிக்கைகள் தான் எங்களை பிரிக்க நினைக்கின்றனர் : மாணிக்கம் தாகூர்

பத்திரிகை குழுமங்கள் தான் வலுவான கூட்டணியை பிரிக்க முயற்சிக்கின்றனர் என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தோழமை கட்சிகளின் இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டம் வரும் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்ந கூட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை அழைப்பு விடுப்பதற்காக
சென்னை இராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனுக்கு
அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ் ஆகியோர் வருகை புரிந்தனர்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் ராஜேஷ்குமார், காங்கிரஸ் எம்பி பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அமைச்சர்களை வரவேற்றனர்.

சுமார் 45 நிமிடங்கள் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி உடன் அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.

பின்னர் இந்த ஆலோசனை குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர்,

இன்றயை தினம் தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் மற்றும் அமைச்சர்கள் ஆதவ், அருண்ராஜ் உள்ளிட்டோர் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தனர்.

வரும் 9 ஆம் தேதி தவெக அலுவலகத்தில் மாலை 4 மணி அளவில் தவெக தோழமை கட்சியின் இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் கூட்டணிக்கு பெயர்
சூட்டப்பட்டு அறிவிக்கப்பட இருக்கிறது. இந்தக் கூட்டணி நல்ல நிலைக்கு செல்ல வேண்டும், பலமாக இருக்க வேண்டும், அனைத்து பிரச்னைகளிலும் ஒத்த கருத்து எடுக்க வேண்டும் என்பதே எங்களின் எண்ணம் எனவும்
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ளும் என தெரிவித்தார்.

இடதுசாரிகள் கடந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வில்லை இந்த இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வார்களா என்ற கேள்விக்கு

எங்களுக்கு தவெக சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டது. நாங்கள் கலந்து கொள்கிறோம் என தெரிவித்தார்.
முதல் கூட்டத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

பிரதமர் வேட்பாளர் தொடர்பான கேள்விக்கு

பிரதமர் வேட்பாளர் யார் என கூறுவது முடிந்து போன கதை.

2029 ஆம் ஆண்டு ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் எனவும் தமிழக முதலமைச்சராக விஜய் இருக்க வேண்டும்,
அவர் இப்போது தான் அவரது பணியை தொடங்கி உள்ளார் எனவும் அதை அவரே கூறி உள்ளார் என தெரிவித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தெளிவாக உள்ளது. ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என உறுதியாக உள்ளது.

செப்டம்பர் 9 ஆம் தேதிக்கு பிறகு பேசி கொள்ளலாம் என கூறினார்.

பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தியா, விஜயா என செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பிய நிலையில்

பத்திரிகை குழுமங்கள் தான் வலுவான கூட்டணியை பிரிக்க முயற்சிக்கின்றனர் என தெரிவித்தார்.

உடனே செய்தியாளர்கள்,

காங்கிரஸ் அமைச்சர் ராஜேஸ் குமார் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என ஏற்க மறுக்கும் போது நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என கூறிய பிறகும், தவெக அமைச்சர்கள் விஜய் தான் பிரதமர் வேட்பாளர் என கூறி வருவது குறித்தான கேள்விக்கு,

மாணிக்கம் தாகூர் மலுப்பலான பதிலை அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *