Headlines

பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன : அமைச்சர் சம்பத்குமார்

பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன : அமைச்சர் சம்பத்குமார்

பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதிகள் மேம்படுத்தப்பட்டு உணவுகள் தரமாக வழங்கப்படுவதாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்தார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய சித்தா மருத்துவ நோயாளிகள் பகுதி கட்டடத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு விக்னேஷ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

இதையடுத்து அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தனியார் தொண்டு நிறுவனம் மூலம் வழங்கப்பட்ட பேட்டரி கார் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

முன்னதாக தனியார் நிறுவனம் ஆர் கோல்ட் சார்பாக காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ரேக்ளா சிலை மற்றும் பழைய பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தென்னை மர சிலைகளை அமைச்சர் சம்பத் குமார் திறந்து வைத்தார்.
இதையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சம்பத்குமார் கூறுகையில்,
அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் தமிழக முதல்வர் பல நல்ல திட்டங்கள் அளித்து வருகிறார்.

பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதி மேம்படுத்தப்பட்டு உணவுகள் தரமாக தரப்படுகிறது.

பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனை சிறந்த மருத்துவமனையாக விளங்குகிறது.
மருத்துவர்கள் பற்றாக்குறை, ஊழியர்கள் பற்றாக்குறை இருந்தால் விரைவாக நிரப்பப்படும்.

மேலும் அனைத்து துறை ஊழியர்களும் பயன் தரும் வகையில் தமிழக முதல்வர் திட்டங்களை அறிவிக்க உள்ளார்.

அனைத்து மாணவர்களுக்கும் சேரும் விதமாக திட்டங்கள் தமிழக முதல்வர் அறிவித்து வருகிறார் என கூறினார் .

மதுவிலக்கு அமைச்சர் விக்னேஷ் கூறுகையில், டாஸ்மார்க்கில் 200 படிகள் அசத்தமாக உள்ளது இப்பொழுதுதான் 75 என்பது படிகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

டாஸ்மார்க் ஊழியர்கள் கூடுதலாக பணம் பெற்றதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இது அவர்களுக்கு அறிவுறுத்தும் விதமாக கொடுக்கப்பட்டது இது தண்டனை அல்ல

தற்போது டாஸ்மாக் ஊழியர்களுக்கு கூடுதலாக மாத ஊதியம் வழங்கப்பட்டு உள்ளது. ஒருபோதும் மிரட்டலுக்கு அரசு அடிப்பணியாது என தெரிவித்தார்.

இதில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் மற்றும் பொள்ளாச்சி சார் ஆட்சியர் ராமகிருஷ்ண சாமி, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *