Headlines

குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததார் வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததார் வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய
முதல் நிலை ஒப்பந்ததாரரான அவிநாசியை சேர்ந்த வேலுமணியின் அலுவலகம் மற்றும்  காமராஜ் நகரின் உள்ள வீடு என இரு இடங்களிலும் ஒரே சமயத்தில் திருப்பூர் சரக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணிக்கு சொந்தமான அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியில் உள்ள வி ஆர் வாட்டர் இன்ஃப்ரா கம்பெனி நிறுவன அலுவலகம் மற்றும் அவிநாசி காமராஜ் நகர் பகுதியில் உள்ள அவரது வீடு ஆகிய இடங்களில் ஒரே சமயத்தில் திருப்பூர் சரக லஞ்ச ஒழிப்பு துறை துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் ஆய்வாளர் சசிரேகா உள்ளிட்ட குழுவினர் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    
இன்று காலை 8 மணிக்கு துவங்கிய இந்த அதிரடி சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது.
    கான்ட்ராக்டர் வேலுமணி, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கும், திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவிற்கும் மிக நெருக்கமானவர் என அரசியல் வட்டாரத்தில் பேச்சு நிலவுகிறது.

கடந்த 2024 ஆண்டில் கோவை வருமான வரித்துறையினர் இதே இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர் என்பதும் அப்போது பணம் ஏதும் கைப்பற்றப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *