வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் பேட்டை பகுதியை சேர்ந்த ஞானபிரகாசம் (48). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது இரண்டாவது மகன் கிஷோர்( 16 ). இவர் அதே பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தார்.
இதனிடையே பள்ளி விடுமுறை நாள் என்பதால் காலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற கிஷோர் மாலை நீண்ட நேரம் கழித்து வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார்.
அப்போது அவரது பெற்றோர் இது குறித்து கிஷோரிடம் கேட்டு கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து மனம் உடைந்த கிஷோர் வீட்டில் ஒரு அறையில் மின்விசிறியில் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் அவரது பெற்றோர் அறையில் சென்று பார்த்தனர்.
மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் இருந்த கிஷோரை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதயைடுத்து பிரேத பரிசோதனைக்காக கிஷோரின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது .
இது குறித்து குடியாத்தம் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பதினோராம் வகுப்பு பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
