திருப்பூர் மாவட்டம் பல்லடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று நடத்திய சோதனையில் ரூ.1.92 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது.
பல்லடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ரவிசந்திரன் தலைமையிலான போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

பிற்பகல் சுமார் 3 மணிக்கு துவங்கிய சோதனையானது 10 மணியை கடந்தும் தொடர்ந்தது.
இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில், இடைத்தரகர்கள், பத்திர எழுத்தர்கள் என மொத்தம் 6 பேரிடம் இருந்து ரூ.1.92,300-ஐ பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
