Headlines

கியிரோங் செல்ல அனுமதிக்க வேண்டும்:நேபாள அரசுக்கு ஜக்கி வாசுதேவ்

கியிரோங் செல்ல அனுமதிக்க வேண்டும்:நேபாள அரசுக்கு ஜக்கி வாசுதேவ்

நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் உள்ள போதேகோசி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை கைலாஷ் யாத்திரை சென்றவர்கள் உட்பட 157 பேர் உயிரிழந்துள்ளனர். காணாமல் போன ஆயிரக்கணக்கானோரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

ஈஷா அறக்கட்டளை சார்பில் யாத்திரை சென்றவர்களில் 80 பேரின் நிலை என்னவென்று இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

இந்நிலையில் தன்னையும் சில தன்னார்வலர்களையும் கியிரோங் செல்ல அனுமதிக்க வேண்டுமென நேபாள அரசுக்கு ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கியிரோங் வெள்ளத்தில் காணாமல்போன எங்கள் குழுவைச் சேர்ந்த 80 பேர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

மீட்புப்பணிகளுக்கு இடையூறாக இருக்க மாட்டோம்.

எங்களின் ஒரே நோக்கம், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் துணை நிற்பதும், அவர்களுக்கு உதவக்கூடிய ஏதேனும் தகவல், தடயங்களைத் தேடுவதில் உதவுவதும்தான் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *