துபாய் தொழிலாளி சக்திவேலின் கண்ணீர் கதை: கட்டாயத் திருமணம், பண மோசடி, மற்றும் கொலை மிரட்டல்!
“துபாயில் 7 ஆண்டுகள் இரவும் பகலும் கஷ்டப்பட்டு உழைத்து, சம்பாதித்த மொத்தப் பணத்தையும் குடும்பத்தாரிடம் நம்பி ஒப்படைத்தேன். ஆனால், என் விருப்பத்திற்கு மாறாக கட்டாயத் திருமணம் செய்து வைத்து, தற்போது என் உயிருக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளனர். மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் (சுமதி, இந்துமதி, தெய்வேந்திரன்) என்னை ஒரு அறையில் பூட்டி வைத்து சித்திரவதை செய்ததோடு, இரும்பு ராடு மற்றும் உலக்கையால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். ‘போலீசில் புகார் கொடுத்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது, உன்னைக் கொன்றுவிடுவோம்’ என பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். பெத்த தாயும், சொந்தக் குடும்பமும் சேர்ந்து செய்யும் இந்த அநீதிக்கு எனக்கு நியாயம் வேண்டும்!
