Headlines

நெல்லை அருகே பெட்ரோல் குண்டு வீச்சு – குவிக்கப்பட்ட போலீசார்

நெல்லை அருகே பெட்ரோல் குண்டு வீச்சு - குவிக்கப்பட்ட போலீசார்

நெல்லை தச்சநல்லூர் அருகே உள்ள ஊருடையான் குடியிருப்பு நயினார் குளம் பகுதியில் குறிப்பிட்ட சமூதாய தலைவர் திருவுருவப் படபீடத்தின் அருகே இரவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை தச்சநல்லூர் அருகே உள்ளது ஊருடையான்குடியிருப்பு நயினார்குளம் பகுதியில் ஒரு சமூதாய தலைவர் புகைப்படம் வைக்கப்பட்ட பீடம் உள்ளது .
இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் இந்த பீடத்தின் அருகே பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். இதில் அந்த குண்டு பீட சுவர் மீது விழுந்ததாக கூறப்படுகிறது .

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அங்கிருந்த சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்ததில் இப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இரு வாலிபர்கள் மதுபோதையில் ரகளை ஈடுபட்டுள்ளதும் அவர்கள் பெட்ரோல் குண்டு வீசியதும் தெரியவந்தது .

சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து மர்ம நபர்கள் அடையாளம் காணப்பட்டனர் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த ஆகாஷ், சந்தனகுமார் என்பதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்ட இரண்டு பேரையும் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், கோவில் சம்பந்தமான ஊர்ப் பிரச்சனையின் காரணமாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் கூடுதல் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *